என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேரளா தங்கம் கடத்தல்"
- கேரளா மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கே.டி.ஜலீல் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு.
- எந்த நிலைக்கும் இறங்க முடியும் என்று அவர் நினைக்கிறார்.
திருவனந்தபுரம்:
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான ஸ்வப்னா சுரேஷ், நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இதில் தொடர்பு இருப்பாக கூறியிருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜலீல் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் ஆகியோர் மீதும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று பேட்டி அளித்த ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளதாவது:
இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழித்து விட்டனர். கேரள முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கே.டி.ஜலீல் மீதான எந்த குற்றச்சாட்டுகளையும் அவரால் மறுக்க முடியாது. இது குறித்து ஆதாரத்துடன் எனது வாக்குமூலத்தில் சேர்த்துள்ளேன். அவர்தான் தற்போது இந்த ஆதாரங்களை அழிக்க நினைக்கிறார்.
எந்த நிலைக்கும் இறங்க முடியும் என்று அவர் நினைக்கிறார். எம்.எல்.ஏவாக அவர் எதையும் செய்ய முடியும், ஒரு நாளிதழையோ அல்லது பத்திரிகையையோ அல்லது என்னைப் போன்ற ஒரு பெண்ணையோ தாக்க முடியும்.
சிலவற்றை என்னால் வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் இது வழக்கின் ஒரு பகுதி, அது விசாரணையில் உள்ளது. எனவே உண்மையை கூற முடியாமல் திணறுகிறேன். என்னுடைய ஆதாரங்களை அவர்கள் அழித்தாலும் அவற்றை மீண்டும் சேகரிக்க நான் முயன்று வருகிறேன். இந்த வழக்கில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது.
- இதிலும் ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் ஸ்வப்னா.
இவர் சமீபத்தில் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பாக கூறியிருந்தார்.
பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதனை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தினர். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பினராயி விஜயனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஸ்வப்னா குற்றம் சாட்டினார். மேலும் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் கேரளாவில் நடந்த லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. மீண்டும் தொடங்க உள்ளது.
இந்த ஊழல் வழக்கிலும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக வருகிற 11-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஸ்வப்னாவுக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது. இதிலும் ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- கேரள முன்னாள் மந்திரி ஜலீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ஸ்வப்னா கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளது. இந்த வழக்கில் ஸ்வப்னா மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 120 பி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சமீபத்தில் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தில் தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார்.
இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஸ்வப்னாவிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.
அதன்படி கடந்த வாரம் ஸ்வப்னா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரத்திற்கும் மேல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்ற அவரிடம் அதிகாரிகள் சுமார் 5½ மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் அவரிடம் விசாரணை நடக்கிறது.
இந்த நிலையில் கேரள முன்னாள் மந்திரி ஜலீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ஸ்வப்னா கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளது. இந்த வழக்கில் ஸ்வப்னா மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 120 பி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
- ஸ்வப்னாவின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அவரது இந்த புகாரால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முதல்-மந்திரி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டி வருகின்றனர். இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
இந்த சூழலில் ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் சிறையில் இருந்தபோது, ஸ்வப்னாவும் சிறையில் இருந்தார். அப்போது என்னிடம் பேசிய அவர், இந்த வழக்கில் முதல்-மந்திரியை தேவையில்லாமல் உள்ளே இழுத்துள்ளதாக தெரிவித்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், ஸ்வப்னாவின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால் அந்த அறிக்கையை விசாரணை நிறுவனத்துடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.
விசாரணை முடியும் வரை ஸ்வப்னாவின் அறிக்கையை பகிர முடியாது என்று நீதிமன்றம் கூறி உள்ளது. எனினும், ஐகோர்ட்டை அணுகப் போவதாக சரிதாவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஸ்வப்னா சுரேஷ் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்